
தேவையான பொருட்கள்
மட்டன் எலும்பில்லாதது = ஒரு கிலோ
தயிர் = நான்கு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் = இரண்டு மேசை கரண்டி
தக்காளி = ஒன்று பெரியது
பச்ச மிள்காய் = ஐந்து
மிளகு தூள் = முன்று தேக்கரண்டி
மஞ்சள் தூள் = அரை தேக்கரண்டி
உப்பு தூள் = இரண்டு மேசை கரண்டி (அ)(ருசிக்கு)
கொத்து மல்லி தழை = அரை கட்டு (பொடியாக அரிந்தது)
புதினா = ஒரு மேசைகரண்டி (பொடியாக அரிந்தது)
கருவேப்பிலை = ஒரு மேசைகரண்டி (பொடியாக அரிந்தது)
ஆலிவ் ஆயில் = நான்கு மேசை கரண்டி
ஆவிவ் ஆயில் = சுட தேவையான அளவு
லெமன் = முன்று

செய்முறை
1. தேவையான பொருட்களை ரெடியாக வைக்கவும்.மட்டனை நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும், கொத்துமல்லி,புதினா,பச்சமிளகாய், கருவேப்பிலையை நன்கு மண்ணில்லாமல் கழுவி தண்ணீரை வடிக்கவும்.
2.மிக்சியில் கொத்து மல்லி,புதினா,பச்சமிளகாய்,கருவேப்பிலையை அரைத்து அத்துடன் மிளகுதூள் உப்பு தூள்,மஞ்சள் தூளை சேர்க்கவும்.
தக்காளியையும் அரைத்து சேர்க்கவும்.

3.அரைத்த மசாலாக்களுடன் ,தயிர்,மட்டன் ,இஞ்சி பூண்டு ஆகியவற்றை கலக்கவும்.
4.நன்கு கலக்கி ஆலிவ் ஆயிலும் சேர்த்து முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.

5.ஊறிய கறியை BBQ செய்ய கம்பியில் கோர்க்கவும்.
6.BBQ அடுப்பில் தீ மூட்டி நன்கு நெருப்பானதும் சுடவும்.
7.சிறிது சிறிதாக ஆலிவ் ஆயில் கறியில் விடவும்.
8.திருப்பி போட்டு மறுபடி சிறிது எண்ணை விட்டு நன்கு வேகவிடவும்.

9.நன்கு பொரிந்ததும் எடுக்கவும்.
10.சுவையான மட்டன் BBQ ரெடி.
குறிப்பு
இதற்கு கீரின் மாசாலா, மற்றும் ரெட் மசாலா அவரவர் விருப்பபடி எதுவேண்டுமானாலும் போடலாம்.
இதற்கு தொட்டு கொள்ள குபூஸ்,கார்லிக் சாஸ், சாலட் போன்றவையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
No comments:
Post a Comment