Thursday, February 26, 2009

உருளை கிழங்கு ஹல்வா


உருளை கிழங்கு - ஒன்று பெரியது
கடலை பருப்பு - இரண்டு மேசை கரண்டி
நெய் - முன்று தேக்கரண்டி
பாதம் - ஐந்து
பாதம் எஸன்ஸ் - இரண்டு சொட்டு
பால் - கால் கப்
ஏலக்காய் - இரண்டு
சாப்ரான் - இரண்டு பின்ச்

ரெட் கலர் பொடி - ஒரு பின்ச்

1.உருளை கிழங்கை நன்கு வேக வைத்து ஆறியதும் மசித்து கொள்ளவும்.

2.கடலை பருப்பை களைந்து ஐந்து நிமிடம் ஊறவைத்து சுண்டல் பததில் கிள்ளு பதமாக வேக வைக்கவும்.

3.பாதத்தை ஊறவைத்து தோலெடுத்து வைக்கவும்.

4.மிக்சியில் வெந்த கடலை பருப்பு,ஏலக்காய்,பாதம், பால் சாஃரான் சேர்த்து அரைக்கவும்.

5.ஒரு வானலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி அதில் மசித்த உருளை கிழங்கு மறும் அரைத்த கடலை பருப்பு கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.

6.ஏற்கனவே வெந்து இருப்பதால் இரண்டு நிமிடம் கிளறி அதில் சர்க்கரை சேர்க்கவும்.

7.ரெட் கலர் பொடியும் சிறிது கரைத்து ஊற்றி கொள்ளவும்.

8.கடைசியில் சிறிது பதம் எஸன்ஸும், மீதி நெய் சேர்த்து கிளறவும்.
நன்கு கிளறி ஹல்வா பதம் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு
************
அப்பா சூப்பர் ஹல்வா குழந்தைகளுக்கு வாயில் ஏதும் தட்டாமல் சப்பு கொட்டி கொண்டு உள்ளே பொகும்.
இதில் நட்ஸ் உங்கள் இழ்டம் தான் கொஞ்சம் அதிகமாக சேர்ப்பதாக இருந்தாலும் சேர்த்து கொள்ளலாம்.
ஒன்பது மாதம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.
இதை சோமாஸ் செய்ய பூரணமாகவும் பயன் படுத்தலாம்
வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக தாயாரிக்கலாம்.
பட்டர் சேர்த்தால் இன்னும் நல்ல கிளற வரும்.

Saturday, February 21, 2009

பராசாப்பம்









தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி - இரண்டு டம்ளர்

உளுந்து - கால் டம்ளர்

கட்டியான தேங்காய் பால் - அரை மூடி (அ) ரெடி மேட் டின் 200 மில்லி

முட்டை - முன்று

தேஙகாய் எண்ணை - சுட தேவையான அளவு


கீமா வரட்டி கொள்ள

கீமா - கால் கிலோ

எண்ணை - முன்று தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - முன்று தேக்கரண்டி

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு - முக்கால் தேக்கரண்டி

தக்காளி - ஒன்று

வரட்டிய கீமாவுடன் வதக்கி கொள்ள

பொடியாக அரிந்த வெங்காயம் - முன்று

பொடியாக அரிந்த தக்காளி - ஒன்று

பொடியாக அரிந்த கொத்துமல்லி தழை - ஒரு கை பிடி

பொடியாக அரிந்த கருவேப்பிலை - அரை கை பிடி




செய்முறை

1. தேங்காயை பாலெடுக்கவும்.

2.அரிசி உளுந்தை முன்று மணி நேரம் ஊறவைத்து தேங்காய் பால் சேர்த்து அரைத்தெடுக்கவும்.2..எவ்வளவுக்கு எவ்வளவு தேங்காய் பால் சேர்க்கிறோமோ அவ்வளவு சுவையாக இருக்கும்.

3.மட்டன் கீமாவை கழுவி தண்ணீரை வடித்து அதில் மிளகாய் தூள்,மஞ்சள் துள், உப்பு தூள், தக்காளி சேர்த்து நன்கு பிசறி வாயகன்ற வானலியில் எண்ணை விட்டு பிசறிய கீமாவை போட்டு நன்கு வரட்டி வேக விடவும்.

4.பிறகு வெங்காயம் பச்ச மிளகாய்,கருவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து நன்கு கீமாவுடன் சேர்த்து வதக்க வேண்டும்.

5. அரைத்த மாவில் முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து ஊற்றி, வதக்கிய கீமா கலவையையும் சேர்த்து நன்கு கலக்கவும்.தேவைக்கு உப்பு சேர்த்து கொள்ளவும்.

6. ஆப்ப சட்டியில் தேங்காய் எண்ணை விட்டு ஒரு குழி கரண்டி அளவு மாவை ஊற்றி ஆப்பத்துக்கு சுழற்றுவது போல் சுழற்ற வேண்டம். அப்படியே சற்று தடிமனாக சுட்டு எடுக்கவும். ஆப்பத்துக்கு மூடி போடுவது போல் மூடி போட வேண்டும்.இரண்டு பக்கமும் பொருமையாக வேக விடவும். தீயை மிதமாக வைத்து கொள்ளவும்.




இது இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் ஸ்பெஷல் ஐட்டமாகும், இதற்கு தொட்டு கொள்ள மட்டன் குருமா, சிக்கன் குருமா போன்றவை. வெஜ் டேரியன்கள் கீமா, முட்டை சேர்க்காமால் அப்படியே கூட சுடலாம்.



இது எங்க அம்மா செய்யும் ஸ்பெஷல் டிபன் ஆகும்.

ஜலீலா




Sunday, February 8, 2009

சூடு வாய் பொத்து விட்டதா?

ஆ ஆ காரம் சூடு வாய் பொத்து விட்டதா?

1. டீ (அ) வெண்ணீர் குடிக்கும் போது தெரியாம சூடா வாயில் வைத்து நாக்கு பொத்து போய் விட்டதா? கவலை வேண்டாம் உடனே ஒரு மேசைகரண்டி முழுவதும் தேன் எடுத்து குடிங்க. சரியாகி விடும்.



2. ரொம்ப கார சாரமாக சாப்பிட்டு விட்டீர்களா ? அதற்கும் தேன் தான் குடிக்க வேண்டும்.





3.பிறகு கொஞ்ச நாளைக்கு நாக்குக்கு எந்த டேஸ்டும் தெரியாது.




(வடிவேலு சூட ஏதோ சாப்பிட்டு விட்டு இரண்டு காது வழியா ஆவி பறக்குமே அது நெஜம் தான். ஒரு நாள் வெளியில் போகும் அவசரத்தில் சுடாக டீ குடித்து விட்டேன் அவ்வளவு தான் இரண்டு காதும் பிஞ்சு போற அளவுக்கு ஒரு வலி ஒரு நிமிடம் என்ன் ஆயிற்று என்றே தெரியல, பிறகு உடனே தேன் சாப்பிட்டேன் சூப்பர்.)

ஹி ஹி ஹி ஹா ஹா
ஜலீலா

Monday, February 2, 2009

கீபோர்ட் கீளினிங் டிப்ஸ்

1. கீபோர்டில் அதிகமாக உணவு துகள்கள், தூசி எல்லாம் கீழே போய் அடைந்து கொள்ளும் அதற்கு கீபோர்டை தலை கீழா கவிழ்த்து தட்டினாலே எல்லாம் வந்து கீழே விழுந்துவிடும்.



2.அதில் ஏதாவது கொட்டிவிட்டால் அதை அப்படியே துடைக்க கூடாது தலை கீழாக சீல்ங் ஃபேன் துடைப்பது போல் பிடிந்து கொண்டு காட்டன் பட்ஸ் (அ) பெயிண்டிங் பிரெஷ் கொண்டு துடைக்கவும்.ஒவ்வொரு எழுத்தாகவும் கழட்டி துடைக்கலாம்.



3. இதில் டாய்லெட்டில் இருக்கும் கிருமியவிட மோசமான கிருமிகள் அதைல் இருக்குமாம். அதற்காக தான் அவ்வளவு முக்கியம் அதை கீளின் செய்வது.


ஜலீலா பானு, துபாய்.

எலும்பையும் உறைய வைக்கும் குளிர்

எலும்பையும் உறைய வைக்கும் குளிர் வெளி நாடு களில் அதற்கு தினம் இஞ்சி சாய் , இஞ்சி காப்பி, சாப்ரான் பால் , மிளகு பால் , சுக்கு மிளகு போன்றவை போட்டு குடிக்கலாம்.




சூப் வகைகளும் அடிக்கடி குடிக்கலாம்.


பாலக் சூப், தக்காளி சூப், சிக்கன் சூப், காய்கறி சூப்


ஆட்டு கால் சூப், மட்டன் எலும்பு சூப் போன்றவை குடிக்கலாம்.


ஜலீலா பானு துபாய்.




Sunday, February 1, 2009

கல்யாண பெண்ணுக்கு நெற்றி சுட்டி

கல்யாண பெண்ணுக்கு நெற்றி சுட்டி வைக்கும் போது (ஜலீலா)


கல்யாண பெண்ணுக்கு நெற்றி சுட்டி வைக்கும் போது அது ஒரு இடத்தில் நிற்காது அங்கும் இங்கும் பிரண்டு நிற்கும் அதற்கு முன்னாடி வகிடு ஆரம்பத்தில் நெற்றி சுட்டி உடன் ஒரு சிறிய பித்தலை சேஃப்டி பின் கோல்ட் கலரில் இருக்கும் அதை குத்தி விட்டால் அப்ப அப்ப அட்ஜஸ்ட் செய்ய தேவையில்லை, கல்யாண பெண்ணிற்கும் டென்ஷன் இல்லை, இப்பதெல்லாம் தங்கத்தில் தான் பயன் படுத்துகிறார்கள் அது தொலைந்து போகவும் வாய்ப்பில்லை

பெசரட் தோசை

தேவையான பொருட்கள்

முழு பாசி பயறு - ஒரு கப்
அரிசி - கால் கப்
சின்ன வெங்காயம் - ஆறு
இஞ்சி ஒரு துண்டு
பச்ச மிளகாய் - இரண்டு
உப்பு - தேவைக்கு





செய்முறை

************

முழு பாசி பயிறையும், அரிசியையும் ஒன்றாக சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

காலையில் அதனுடன் சின்ன வெங்காயம்,இஞ்சி, பச்சமிளகாய் சேர்த்து அரைக்கவும்.அரைத்து தோசைகளாக வார்க்கவும்.

குறிப்பு
குழந்தைகளுக்கு என்பதான் வெங்காயம் சேர்த்து அரைக்கிறோம் பெரியவர்கள் சாப்பிடுவதாக இருந்தால் பொடியாக அரிந்து சேர்த்து சுடலாம்.இதில் புரொட்டீன் அதிகம் உள்ளது, குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.ஜலீலா

நல்லது.

ஜலீலா