தே.பொருட்கள்
கடலை மாவு = அரை டம்ளர்
அரிசி மாவு = கால் டம்ளர்
இஞ்சி பூண்டு பேஸ்ட் = கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் = தேக்கரண்டி
உப்பு தூள் = தேவைக்கு
காஷ்மீரி சில்லி பொடி = அரை தேக்கரண்டி
ரெடி கலர் பொடி = பின்ச்
எண்ணை = பஜ்ஜி சுட தேவையான அளவு
ரெட் கலர் தக்காளி = இரண்டு
செய்முறை
1. தக்காளியை வட்டவடிவமாக கட் செய்து வைக்கவும்.
2. பஜ்ஜி கலக்க தேவையான பொருட்களை ஒன்றாக சேர்த்து தயிர் பதத்திற்கு கலக்கி ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.
3. எண்ணை காய்ந்ததும் பஜ்ஜிகளாக சுட்டெடுக்கவும்.
புளிப்பு சுவையுடன் கூடிய வித்தியாசமான தக்காளி பஜ்ஜி ரெடி.
குறிப்பு
பஜ்ஜி வெங்காய பஜ்ஜி சிலருக்கு எடுத்து தோய்த்து போடும் போது பிஞ்சி போய் விடும் அதுக்கு, வெங்காயத்தை வட்டவடிவமாக வெட்டி சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து பிறகுதோய்த்தால் கொஞ்சம் கிரிப்பாக நிற்கும்.
பஜ்ஜி வெங்காய பஜ்ஜி சிலருக்கு எடுத்து தோய்த்து போடும் போது பிஞ்சி போய் விடும் அதுக்கு, வெங்காயத்தை வட்டவடிவமாக வெட்டி சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து பிறகுதோய்த்தால் கொஞ்சம் கிரிப்பாக நிற்கும்.
மிளகாய் பஜ்ஜி ரொம்ப காரமாக இருந்தால் சிறிது உப்பு, வினிகர் சேர்த்து ஊறவைத்து பிறகு சுட்டால் காரமும் தெரியாது, சுவையும் வித்தியாசமாக இருக்கும்.

பஜ்ஜி ரொம்ப ஈசியா தயாரித்து விடலாம். இதை வாழைக்காய், உருளை,முட்டை,அப்பளம், வெங்காயாம்,கத்திரிக்காய்,வெங்காயம்,பேபிகார்ன் எலாவற்றிலும் இதை தயாரிக்கலாம்.கடலை மாவு கேஸ் என்பதால் அதில் சோம்பு (அ) இஞ்சி பூண்டு பேஸ்ட் (அ) பூண்டு பொடி (அ) பொருங்காயப் பொடி அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு போட்டு கொள்ளலாம்.இல்லை எல்லாமே ஒரு பின்ச்சும் போடலாம்.
காய்கறி சாப்பிடதா குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுக்கலாம்.வீட்டில் உள்ள காயை வைத்து நினைத்தால் நிமிஷத்தில் தயாரித்து விடலாம்.
இதற்கு தொட்டு கொள்ள பொட்டு கடலை துவையல், கெட்சப்,பேரிட்சை சட்னி , புதினா துவையல் எல்லாமே நல்ல இருக்கும்.
தக்காளி பஜ்ஜி புதுசா இருக்கு,செய்து பார்க்கனும் ஜலிலாக்கா!!
ReplyDeleteஆமாம் மேனகா புதுசுதான், வெள்ளரி பஜ்ஜி அதுவும் செய்து சாப்பிட்டு பாருங்கள்.
ReplyDeleteஇது புளிப்பா கர்பிணி பெண்கள்வாய்க்கு ருசி படும்.வாழக்காய்,உருளை சாப்பிட்டால் கேஸ் பிராப்ளம்வருபவர்கள். இப்படி செய்து சாப்பிடலாம்.